5999 முறை தோற்ற எடிசன்!!!

0 Comments
    பள்ளிக்கு சென்று பாடம் படிக்காத விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், சுயமாக படித்து முன்னுக்கு வந்தார். மிக அதிக எண்ணிக்கையில் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர் என்ற பெருமை எடிசனுக்கு மட்டுமே உண்டு. மின் விளக்குக்கு எந்த உலோகக் கலவை இழை உகந்ததாக இருக்கும் என்பதை கண்டறிய கிட்டத்தட்ட ஆறாயிரம் முறை வெவ்வேறு உலோக இழைகளைக் கொண்டு போராடினார்.

   இதுகுறித்து எடிசன் கூறும்போது, “முதல் சோதனையே எனக்கு வெற்றிதான். ஏனெனில் அதுதான் இரண்டாவது சோதனையை செய்யத் தூண்டியது. விளக்குக்கு சரியான மின்னிழையைக் கண்டுபிடிக்க எனக்கு ஒரு முயற்சிதான் தேவைப்பட்டது. ஆனால் அதற்கு எந்தெந்த உலோக இழைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்குத் தான் 5999 முறை தேவைப்பட்டது. மேலும் 5999 உலோக இழைகளை மின் விளக்குக்கு பயன்படுத்த முடியாது என்பதையும் கண்டுபிடித்துள்ளேன்” என்றார்.

   ஒரு சமயம் ஒரு விருந்தினரின் வீட்டில் நடைபெற்ற தொடர் நிகழ்ச்சியைப் பார்க்கும்படியான கட்டாயம் ஏற்பட்டது. அது அவருடைய மனதைக் கவரவில்லை என்பதால் பெரிதும் சலிப்புற்றார் எடிசன். அவர் வெளியே புறப்பட முயற்சி செய்யும்போதெல்லாம் யாராவது ஒருவர் அவர் கையைப் பிடித்து பேசியபடி ஹாலுக்குள் அழைத்துச் சென்றபடி இருந்தனர். ஒருவழியாக கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி இறுதியில் கதவோரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

    அப்போது மிகவும் உற்சாகமாக வந்த ஒருவர் எடிசனிடம், “நீங்கள் இங்கே வந்திருப்பது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுடன் இருப்பது எங்களுக்கு நீங்கள் அளித்த கவுரவம். அடுத்து நீங்கள் என்ன கண்டுபிடிக்கப் போகிறீர்கள்” என்றார்.

   அதற்கு “இங்கிருந்து எப்படி வெளியேறுவது என்று கண்டுபிடிக்கவிருக்கிறேன்!”என்று சட்டென பதில் கூறினார் எடிசன்.
 - ஈகரை....
   " முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"


You may also like

No comments:

Powered by Blogger.