Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts
   65 ஆண்டுகளாக அழிந்ததாக கருதப்பட்ட "தேவாங்கு" இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.  இப்போது தேவாங்கை தேடுவது போல் இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் வேறொரு இனத்தை அங்கு தேடவேண்டிய நிலை வந்தாலும் வரலாம் யார் கண்டது??? இதுக்கு மேல பேசுனா உள்ள தூக்கி போட்டாலும் போட்டுடுவாங்க. அதனால் நான் நேரா மேட்டருக்கு வரேன்.

   "தேவாங்கு" இதை பற்றி அதிகம் கேள்வி பட்டு இருக்க மாட்டோம். நமது நண்பர் ஒருவர் 'தேவாங்கு பக்கங்கள்' என அவரது பக்கத்துக்கு தலைப்பிட்டுள்ளார். பெரியவங்க "மூஞ்ச பாரு தேவாங்கு மாதிரி!" அப்புடின்னு திட்டுவதை பார்த்திருக்கேன்.(யாரை திட்டினாங்க-னு கேக்காதிங்க என்னோட சீக்ரெட் எல்லாம் நான் வெளியில சொல்லுறது இல்ல).  இது மரங்களுக்கு இடையே வாழும் 350 கிராம் வரை எடையுள்ள ஒரு சிறு பாலூட்டி விலங்கு. முட்டை, பூச்சி, பல்லி போன்றவற்றை உண்ணும். இது இரவில் தான் இறை தேடும். இரவில் இதன் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

   உலகில் மனிதன் காடுகளை மட்டும் அல்ல அதில் உள்ள பல உயிரினங்களை அழித்துக்கொண்டு இருக்கிறான். இந்த தேவாங்கு இலங்கையில் 1939 ஆம் ஆண்டு கடைசியாக காணப்பட்டது. மனிதனின் சுயநலம் காரணமாக இலங்கையில் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதால் இவை அழியும் நிலைக்கு காரணமானது. இலங்கையின் ஓடன் சமவெளிப் பகுதியில் 120 இடங்களில் நடத்தப்பட்ட சுமார் 3 ஆண்டிற்கும் மேற்பட்ட ஆய்வில் இவ்விலங்கு இருப்பதை ஆய்வியலாளர்கள் புகைப்படத்துடன் உறுதிசெய்துள்ளனர். அங்கு இதன் எண்ணிக்கை 100 க்கும் குறைவாகத்தான் இருக்கும் என கூறியுள்ளனர். 

   தமிழகத்தில் நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொய்கைமலை வனப்பகுதிகளில் தேவாங்குகள் வசித்து வருவதாக கருதப்படுகிறது.  இங்கும் இவை நிம்மதியாக இல்லை. குறவர் போன்றவர்களால் அதிகமாக வேட்டையாடப்படுகிறது. ஆஸ்துமா நோயை குணமாக்கும் என்ற தவறான எண்ணத்திலும் இவை வேட்டையாடப்படுகிறது. எனவே தேவாங்கை காக்க மணப்பாறை பொய்கைமலையில் சரணாலயம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

   எது எப்படி இருப்பினும் விலங்குகள் மட்டும் அல்ல மனிதனும் தன் அழிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறான் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

  ஏறட்டும் ஏறட்டும், அப்பவாவது ட்ராபிக்கும், அச்சிடேன்ட்டும் குறையுதான்னு பார்ப்போம்.  என்னதான் விலை ஏறினாலும் நாங்க வண்டிவிட்டு ஈரான்கமட்டோம்னு இருகிரவனுங்க எத்தனையோ பேர்...

  நாங்க இதுல எப்பவும் முதல்ல இருப்போமுள்ள...

  செய்த போதனைஎல்லாம் போதலயாம்..... இன்னும் அவர் சேவையை தொடரனுமாம்!!

  மனித இனம் மட்டும் ????

 சொல்லி இருந்தா நானும் என் கட்டுரைய எடுத்துட்டு வந்திருப்பேனே.... எவளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா???

   வாஷிங்டன் : சர்வதேச அளவில், இந்த ஆண்டுக்கான,"அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை' சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 128ம் இடம் பெற்றுள்ளது.

   போர், பயங்கரவாதம், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு எதிராக செயல்படும் நாடுகள் குறித்து ஆய்வு செய்து, சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் கடந்த 2007ம் ஆண்டு முதல், "அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை' வெளியிட்டு வருகிறது. இதில், மொத்தமுள்ள 145 இடங்களில், இந்தியா 128ம் இடம் பிடித்துள்ளது.கடந்த ஆண்டில் 122வது இடம் பெற்றிருந்தது. அதற்கு முன் 2007ல் வெளியான பட்டியலில் இந்தியா 109ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை வெளியான பட்டியலில் இடம்பெறாத பாகிஸ்தான், இந்த பட்டியலில் 145ம் இடத்தை பிடித்துள்ளது.ரஷ்யாவில் இப்போது அமைதி என்பது அதிகம் இல்லை. 

   அதனால், ரஷ்யா இப்பட்டியலில் 143வது இடத்தில் இருக்கிறது. சீனாவும் தரம் இறங்கி 80வது இடத்திற்கு வந்திருக்கிறது. மிகவும் அமைதி நிலவும் நாடுகள் பட்டியலில், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகள் இந்த பட்டியலில் முதல் 20 இடங்களை பிடித்துள்ளன. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் மிகமோசமாக அடிமட்டத்தில் உள்ளன.

   நன்றி தின மலர்....

புற்றுநோய் தாக்கிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரே மாதத்தில் சச்சின் டெண்டுல்கர் ரூ.1.30 கோடி திரட்டி உள்ளார்.

Powered by Blogger.