ஏறட்டும் ஏறட்டும், அப்பவாவது ட்ராபிக்கும், அச்சிடேன்ட்டும் குறையுதான்னு பார்ப்போம்.  என்னதான் விலை ஏறினாலும் நாங்க வண்டிவிட்டு ஈரான்கமட்டோம்னு இருகிரவனுங்க எத்தனையோ பேர்...

  நாங்க இதுல எப்பவும் முதல்ல இருப்போமுள்ள...

  செய்த போதனைஎல்லாம் போதலயாம்..... இன்னும் அவர் சேவையை தொடரனுமாம்!!

  மனித இனம் மட்டும் ????

 சொல்லி இருந்தா நானும் என் கட்டுரைய எடுத்துட்டு வந்திருப்பேனே.... எவளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா???

    நீங்கள் browsing சென்டரில் கணினி பயன்படுத்துபவரா? இல்லை அலுவலகத்தில் பிறர் பயன்படுத்திய கணினியை பயன்படுத்துபவரா?  ஆம் எனில் இந்த பதிவு உங்களுக்காகவே....


   நம்மில் பலர் மெயில் அனுப்பும்போது படங்கள், ரகசிய வார்த்தைகள், அல்லது முக்கிய நிகழ்வுகளை நமது நண்பர்களுக்கு அனுப்புவோம்.  அப்பொழுது தேவையான படங்கள் அல்லது வரிகளை நாம் ஒரு இடத்திலிருந்து காபி, பேஸ்ட் செய்து நமது நண்பர்களுக்கு அனுப்புவோம்.

  நமது அலுவலகத்திலோ அல்லது சென்டேரிலோ வேறொருவரது விரல்கள் ctrl+V என்ற விசைகள் அழுத்தப்பட்டால் உங்களது வரிகள் அல்லது படங்களை அவர் பார்க்க நேரிடும்.

இதை தவிர்க்க எனக்கு தெரிந்தவரை இரண்டு வழிகள் உள்ளது. 
  1. MS Office இல் உள்ள clip bord.
  2. Clip bord Viewer.
1. MS Office இல் உள்ள clip bord:
Office 2007 இல் ஏதேனும் ஒரு World, Exel, PPT, எதுவாயினும் Home என்ற ribbon இல் கீழுள்ள clip bord என்ற பட்டிக்கு நேராக உள்ள ஒரு சிறிய dorp box ஐ கிளிக் செய்யுங்கள். பிறகு கிடக்கும் கிளிப் Bord என்ற pane இல் Clear All என்ற butten ஐ click செய்தால் நாம் காபி செய்தது அழிக்கப்பட்டு விடும்.





   (Office 2003 பயன்படுத்தினால் Edit -> Office Clip Bord என்பதை கிளிக் செய்தால் இந்த pane ஐ பெறலாம்.)

2. Clip bord Viewer:
   Start -> Run கொடுத்த பிறகு அங்குள்ள எழுத்து பெட்டியில் " clipbrd " என டைப் செய்து ஓகே கொடுப்பதன் மூலம் கிடைக்கும் விண்டோவில் delete butten ஐ அழுத்திய பிறகு கிடைக்கும் dialog box ல் ஓகே கொடுப்பதன் மூலம் நாம் காபி செய்ததை அழிக்க முடியும்.

   இனி நீங்கள் உசாராக இருப்பீர்கள் என நினைக்கிறேன்.  செய்து பார்த்து தங்கள் கருத்துக்களையும், சந்தேகம் இருந்தால் அதையும் சொல்லுங்கள் பார்க்கலாம்....




Adware: சாப்ட்வேர் பயன்பாடு ஒன்றினுள் விளம்பரம் ஒன்றினை, எடுத்துக்காட்டாக பேனர் விளம்பரச் செய்தி, இயக்கும் தொகுப்பு.

Auto Responder: ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இமெயில் கடிதத்தினைப் பதிலாக அனுப்பும் புரோகிராம். நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா? இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர்களா? நான் ஊரில் இல்லை 10 நாட்கள் கழித்துத்தான் இதற்குப் பதில் அனுப்ப முடியும் என்ற செய்தியினை கடிதமாக அனுப்பி வைத்தால் உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களுக்குத் தானாக இதன் மூலம் பதில் அனுப்பலாம். இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்களும் இமெயில் கிளையன்ட் புரோகிராம்களும் இந்த வசதியை வைத்திருக்கின்றன.


Bandwidth: ஒரு நெட்வொர்க் இணைப்பில் பரிமாறப்படும் டேட்டா எனப்படும் தகவல்கள் அளவு.


Browser: இன்டர்நெட்டில் உள்ள தகவல்களை எடுத்துத் தரும் சாப்ட்வேர் தொகுப்பு.


Buffer: தற்காலிகமாக டேட்டாவைச் சேமித்து வைக்கும் இடம்; இதனை புரோகிராம்களும் பிரிண்டர், சிடி ரைட்டர் போன்ற சாதனங்களும் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டிய டேட்டாவைத் தங்க வைத்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும்.


Cache: இதுவும் தற்காலிக மெமரிதான். நீங்கள் பயன்படுத்தும் இணைய தளங்கள் சார்ந்த தகவல்களைத் தற்காலிகமாகச் சேர்த்து வைத்துக் கொள்ளும் இடம். ஒவ்வொருமுறை நீங்கள் அதே தளத்திற்குச் செல்கையில் அல்லது ஒரே செயல்பாட்டினை மேற்கொள் கையில் இதற்கென புதியதகவல்களைப் பெற்று செயல்படாமல் தேக்கி வைக்கப் பட்டுள்ள இந்த கேஷ் மெமரியிலிருந்து பெற்று பிரவுசர் பயன்படுத்திக் கொள்ளும்.


Cookie: வெப்சைட் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துக் கொள்ளும் சிறிய புரோகிராம். அந்த வெப் சைட்டைப் பொறுத்தவரை உங்கள் அணுகுமுறை மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் இதில் பதியப்படுவதால் அந்த வெப்சைட் உங்களை எளிதாக அடையாளம் கொண்டு தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்.


   நன்றி தினமலர்....
   வாஷிங்டன் : சர்வதேச அளவில், இந்த ஆண்டுக்கான,"அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை' சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 128ம் இடம் பெற்றுள்ளது.

   போர், பயங்கரவாதம், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு எதிராக செயல்படும் நாடுகள் குறித்து ஆய்வு செய்து, சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் கடந்த 2007ம் ஆண்டு முதல், "அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை' வெளியிட்டு வருகிறது. இதில், மொத்தமுள்ள 145 இடங்களில், இந்தியா 128ம் இடம் பிடித்துள்ளது.கடந்த ஆண்டில் 122வது இடம் பெற்றிருந்தது. அதற்கு முன் 2007ல் வெளியான பட்டியலில் இந்தியா 109ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை வெளியான பட்டியலில் இடம்பெறாத பாகிஸ்தான், இந்த பட்டியலில் 145ம் இடத்தை பிடித்துள்ளது.ரஷ்யாவில் இப்போது அமைதி என்பது அதிகம் இல்லை. 

   அதனால், ரஷ்யா இப்பட்டியலில் 143வது இடத்தில் இருக்கிறது. சீனாவும் தரம் இறங்கி 80வது இடத்திற்கு வந்திருக்கிறது. மிகவும் அமைதி நிலவும் நாடுகள் பட்டியலில், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகள் இந்த பட்டியலில் முதல் 20 இடங்களை பிடித்துள்ளன. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் மிகமோசமாக அடிமட்டத்தில் உள்ளன.

   நன்றி தின மலர்....
    பள்ளிக்கு சென்று பாடம் படிக்காத விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், சுயமாக படித்து முன்னுக்கு வந்தார். மிக அதிக எண்ணிக்கையில் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர் என்ற பெருமை எடிசனுக்கு மட்டுமே உண்டு. மின் விளக்குக்கு எந்த உலோகக் கலவை இழை உகந்ததாக இருக்கும் என்பதை கண்டறிய கிட்டத்தட்ட ஆறாயிரம் முறை வெவ்வேறு உலோக இழைகளைக் கொண்டு போராடினார்.

   இதுகுறித்து எடிசன் கூறும்போது, “முதல் சோதனையே எனக்கு வெற்றிதான். ஏனெனில் அதுதான் இரண்டாவது சோதனையை செய்யத் தூண்டியது. விளக்குக்கு சரியான மின்னிழையைக் கண்டுபிடிக்க எனக்கு ஒரு முயற்சிதான் தேவைப்பட்டது. ஆனால் அதற்கு எந்தெந்த உலோக இழைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்குத் தான் 5999 முறை தேவைப்பட்டது. மேலும் 5999 உலோக இழைகளை மின் விளக்குக்கு பயன்படுத்த முடியாது என்பதையும் கண்டுபிடித்துள்ளேன்” என்றார்.

   ஒரு சமயம் ஒரு விருந்தினரின் வீட்டில் நடைபெற்ற தொடர் நிகழ்ச்சியைப் பார்க்கும்படியான கட்டாயம் ஏற்பட்டது. அது அவருடைய மனதைக் கவரவில்லை என்பதால் பெரிதும் சலிப்புற்றார் எடிசன். அவர் வெளியே புறப்பட முயற்சி செய்யும்போதெல்லாம் யாராவது ஒருவர் அவர் கையைப் பிடித்து பேசியபடி ஹாலுக்குள் அழைத்துச் சென்றபடி இருந்தனர். ஒருவழியாக கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி இறுதியில் கதவோரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

    அப்போது மிகவும் உற்சாகமாக வந்த ஒருவர் எடிசனிடம், “நீங்கள் இங்கே வந்திருப்பது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களுடன் இருப்பது எங்களுக்கு நீங்கள் அளித்த கவுரவம். அடுத்து நீங்கள் என்ன கண்டுபிடிக்கப் போகிறீர்கள்” என்றார்.

   அதற்கு “இங்கிருந்து எப்படி வெளியேறுவது என்று கண்டுபிடிக்கவிருக்கிறேன்!”என்று சட்டென பதில் கூறினார் எடிசன்.
 - ஈகரை....
   " முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"

புற்றுநோய் தாக்கிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரே மாதத்தில் சச்சின் டெண்டுல்கர் ரூ.1.30 கோடி திரட்டி உள்ளார்.


       உலக சுற்றுச்சூழல் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும். இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1972 ஆன் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.

     ஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணித்துக்கொண்டிருந்தார். வழியில் ஒரு ஆற்றைக்கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நீண்ட தூரம் நடந்து களைத்துப் போயிருந்த புத்தரும் சீடர்களும் ஆற்றங்கரையில் அமர்ந்தனர். புத்தர் தனக்கு தாகமாக இருப்பதாகவும் ஆற்றில் தண்ணீர் எடுத்துவரும்படியும் ஒரு சீடரைப்பணித்தார்.

Powered by Blogger.