இந்தியா 128வது இடம்

0 Comments
   வாஷிங்டன் : சர்வதேச அளவில், இந்த ஆண்டுக்கான,"அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை' சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா 128ம் இடம் பெற்றுள்ளது.

   போர், பயங்கரவாதம், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு எதிராக செயல்படும் நாடுகள் குறித்து ஆய்வு செய்து, சர்வதேச பொருளாதார மற்றும் அமைதி மையம் கடந்த 2007ம் ஆண்டு முதல், "அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை' வெளியிட்டு வருகிறது. இதில், மொத்தமுள்ள 145 இடங்களில், இந்தியா 128ம் இடம் பிடித்துள்ளது.கடந்த ஆண்டில் 122வது இடம் பெற்றிருந்தது. அதற்கு முன் 2007ல் வெளியான பட்டியலில் இந்தியா 109ம் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை வெளியான பட்டியலில் இடம்பெறாத பாகிஸ்தான், இந்த பட்டியலில் 145ம் இடத்தை பிடித்துள்ளது.ரஷ்யாவில் இப்போது அமைதி என்பது அதிகம் இல்லை. 

   அதனால், ரஷ்யா இப்பட்டியலில் 143வது இடத்தில் இருக்கிறது. சீனாவும் தரம் இறங்கி 80வது இடத்திற்கு வந்திருக்கிறது. மிகவும் அமைதி நிலவும் நாடுகள் பட்டியலில், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், மேற்கு ஐரோப்பிய நாடுகள் இந்த பட்டியலில் முதல் 20 இடங்களை பிடித்துள்ளன. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் மிகமோசமாக அடிமட்டத்தில் உள்ளன.

   நன்றி தின மலர்....


You may also like

No comments:

Powered by Blogger.