இன்டர்நெட்டில் இவை

1 Comments




Adware: சாப்ட்வேர் பயன்பாடு ஒன்றினுள் விளம்பரம் ஒன்றினை, எடுத்துக்காட்டாக பேனர் விளம்பரச் செய்தி, இயக்கும் தொகுப்பு.

Auto Responder: ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இமெயில் கடிதத்தினைப் பதிலாக அனுப்பும் புரோகிராம். நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா? இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர்களா? நான் ஊரில் இல்லை 10 நாட்கள் கழித்துத்தான் இதற்குப் பதில் அனுப்ப முடியும் என்ற செய்தியினை கடிதமாக அனுப்பி வைத்தால் உங்கள் இமெயில் முகவரிக்கு வரும் கடிதங்களுக்குத் தானாக இதன் மூலம் பதில் அனுப்பலாம். இன்டர்நெட் சேவை தரும் நிறுவனங்களும் இமெயில் கிளையன்ட் புரோகிராம்களும் இந்த வசதியை வைத்திருக்கின்றன.


Bandwidth: ஒரு நெட்வொர்க் இணைப்பில் பரிமாறப்படும் டேட்டா எனப்படும் தகவல்கள் அளவு.


Browser: இன்டர்நெட்டில் உள்ள தகவல்களை எடுத்துத் தரும் சாப்ட்வேர் தொகுப்பு.


Buffer: தற்காலிகமாக டேட்டாவைச் சேமித்து வைக்கும் இடம்; இதனை புரோகிராம்களும் பிரிண்டர், சிடி ரைட்டர் போன்ற சாதனங்களும் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டிய டேட்டாவைத் தங்க வைத்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும்.


Cache: இதுவும் தற்காலிக மெமரிதான். நீங்கள் பயன்படுத்தும் இணைய தளங்கள் சார்ந்த தகவல்களைத் தற்காலிகமாகச் சேர்த்து வைத்துக் கொள்ளும் இடம். ஒவ்வொருமுறை நீங்கள் அதே தளத்திற்குச் செல்கையில் அல்லது ஒரே செயல்பாட்டினை மேற்கொள் கையில் இதற்கென புதியதகவல்களைப் பெற்று செயல்படாமல் தேக்கி வைக்கப் பட்டுள்ள இந்த கேஷ் மெமரியிலிருந்து பெற்று பிரவுசர் பயன்படுத்திக் கொள்ளும்.


Cookie: வெப்சைட் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துக் கொள்ளும் சிறிய புரோகிராம். அந்த வெப் சைட்டைப் பொறுத்தவரை உங்கள் அணுகுமுறை மற்றும் உங்களைப் பற்றிய தகவல்கள் இதில் பதியப்படுவதால் அந்த வெப்சைட் உங்களை எளிதாக அடையாளம் கொண்டு தேவையானவற்றை எடுத்துக் கொள்ள அனுமதிக்கும்.


   நன்றி தினமலர்....


You may also like

1 comment:

Powered by Blogger.