விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம்? இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா? அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும்.  என்னை பொறுத்தவரை நண்பர்கள், உறவினர்கள், அருகில் உள்ளவர்களிடையே அன்பை பரிமாறுவதே விழாக்களில் உள்ள நன்மை என கூறுவேன்.
   ரக்க்ஷா பந்தன், இது இந்து மத லூனார் நாள்காட்டியின் 'ஸ்ராவன்' மாதத்தில் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழை பொறுத்தவரை பெரும்பாலும் ஆவணி மாதத்தில் முதல் பௌர்ணமி நாளில் வரும். அதன் படி இந்த வருடம் ஆங்கில நாளில் இன்று (ஆகஸ்ட் 24 ஆம் தேதி) ஆகும். இந்துக்கள் பண்டிகைகளிலேயே இது தான் மிகவும் நல்ல பண்டிகை என்று சொன்னால் அது மிகையாகாது.

பொருள்
   இந்தியில் ரக்க்ஷா என்றால் பாதுகாப்பு (Production) என்று பொருள். இது Sanskrit மொழியில் இருந்து பிறந்த வார்த்தை என கருதப்படுகிறது. பந்தன் என்பது கட்டுவதை குறிக்கும்.

   பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் கையில் மஞ்சள் நூல் கட்டி இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதனை ஒரு ஆண் ஏற்றுக்கொள்வதால், அந்தச் சகோதரியின் "பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் துணையாக இருப்பேன்" என உறுதி அளிக்கிறான். ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். இந்த பண்டிகையை ஒரு மதப் பண்டிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என கூறலாம். வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் இந்த விழா, தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருவது மகிழ்ச்சி தரக்கூடியதே. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காண முடிகிறது.

புராணக் கதை
   பலி என்ற மன்னன் விஷ்ணுவின் தீவிர பக்தன். பலியின் ராஜ்ஜியத்தைக் காக்க சத்தியம் கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டு வந்தார் லட்சுமி தேவி விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம் இட்டுக்கொண்டு பலியிடம் அடைக்கலம் புகுந்தாள் அப்போது பூர்ணிமா தினம் அன்று, அவனை சகோதரனாக பாவித்து ராக்கி கட்டி விட்டாள். இது வடக்கில் நம்பும் புராணக் கதை.

   புராணங்களை நான் நம்புவதில்லை. எது எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும் நல்லெண்ணம் ஆரோக்கியமான விஷயம் தானே....

வரலாறு
   பெண்கள் தங்கள் சகோதர அன்பை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக இது பழங்காலந்தொட்டு கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு வருகிறது.

   மாமன்னர் அலெக்சாண்டருக்கும், போரஸிசிர்க்கும் இடையே கடுமையான போர் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அலெக்சாண்டரின் மனைவி போரஸின் கூடாரத்திற்கு சென்று போரஸின் கையில் ஒரு ராக்கியை கட்டிவிட்டு வந்தவழியே திரும்பிவிட்டாள்.

   மறுநாள் போரில் அலெக்சாண்டரை கீழே தள்ளி ஈட்டியை பாய்ச்ச எண்ணிய போரஸ் தன் கையில் இருந்த ராக்கியை பார்த்து விட்டு, "உனது மனைவி என்னது சகோதரி. என் சகோதரி விதவையாக கூடாது" என்று கூறி திரும்பி சென்றதாக வரலாறு.

 கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி படைகளுட‌ன் தாக்க வரும் போது, ‌சி‌த்தூ‌ர்க‌ர் ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. ரா‌ணி ப‌த்‌மி‌னி ரா‌க்‌கி அனு‌ப்‌பியத‌ன் மூல‌ம் அ‌ண்டை நா‌ட்டு ம‌‌ன்ன‌‌ர்க‌ள், தன் சகோதரியையு‌ம், அவ‌ர்களது ஆ‌ட்‌சி‌ப் பகு‌தியையு‌ம் காக்க வே‌ண்டிய கடைமை ஏ‌ற்ப‌ட்டது. அதனா‌ல் அந்த மன்னர்கள் தங்கள் படைகளை அனுப்‌‌பி சு‌ல்தா‌ன் அலாவு‌தீனுட‌ன் போ‌ர் பு‌ரிய ஏ‌ற்பாடு செ‌ய்தது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இந்த நாளின் மற்ற சிறப்பு
   இந்து சமுதாயத்தில் இந்த நாளில் பல பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.  ஸ்ராவன் பூர்ணிமா என்ற விழா பொதுவாக பல வட இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. இதே விழா நரலி பூர்ணிமா என்ற பெயரில் மகாராஷ்டிராவிலும், அக்ஷர் பூர்ணிமா என்ற பெயரில் குஜராத்திலும் கொண்டாடுகின்றனர். இதே நாளில் இந்த வருடம் ஆவணி அவிட்டம் என்ற ஒரு விழாவினை தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர்.

   நல்லது அதிகமா இருந்தா கொண்டாடலாமே.... நல்லா இருந்தா ஓட்டு போடலாமே....
   இரண்டாம் உலகப்போரில் 1945 ஆகஸ்ட் 6, அன்று அமெரிக்காவின் லிட்டில் பாய் விமானம் ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மேல் பறந்து சென்று அணுகுண்டை வீசியது. அதன் பின் இரண்டாவது முறையாக ஆகஸ்ட் 9 அன்று நாகசாஹி நகரின் மீது Fat Man விமானம் அணுகுண்டு வீசித் தாக்கியது. இந்தக் கோரத் தாக்குதல்களில் நேரடியாகப் பலியானவர்கள் தவிர்த்து, காயங்கள், தீக்காயங்கள், பலர் பின்னர் உயிரிழந்தனர் ஹிரோஷிமாவில் 1,40,000 பெரும், நாகசாகியில் 74,000 பெரும் பலியானார்கள்.


   இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா-நாகசாகி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆகஸ்ட் 6 அப்பெரழிவு நிகழ்ந்து 65 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்த தினத்தில் ஜப்பானில் உள்ள நினைவுச் சின்னத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, இறந்த தங்கள் மக்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதைக் காணலாம்.  சாலைகளில் போவோர், வருவோர் கூட குண்டு வீசப்பட்ட காளை 8:15 மணிக்கு தங்கள் வேலைகளை நிறுத்தி, மறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் மீண்டும் தொடர்வது வழக்கம். இந்த குண்டு வெடிப்போடு இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இதை அடுத்து ஜப்பான் சரணடைவதாக கையெழுத்திட்டது.
   நம்ம Computer ல நாம பாட்டுக்கு வேலை செய்துகிட்டு இருப்போம். திடீரென எதோ ஒரு காரணத்துக்காக ரொம்ப அவசரமா ஒரு வலை பக்கத்த திறப்போம். அந்து Load ஆகும் போது ஒரு நீளமான கோடு வரும் அப்புறம் அந்த கோடு Screen முழுக்க விரியும். என்னன்னு பாத்தா எதாவது ஒரு விளம்பரம் வந்து நிக்கும். அப்படியே நம்ம Monitor அ தூக்கி போட்டு ஒடச்சி போட்டுலாம் போல தோணும். ஆனா அதெல்லாம் செய்யாம Close Button எங்க இருக்கன்னு தேடி, அத அழுத்திட்டு வேலைய பாப்போம்.

   இதை தடுப்பதை பற்றி ஏற்கனவே வின்மணி எழுதிய பதிவில் நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி இல்லை எனில் இங்கு கிளிக் செய்து பார்த்துவிட்டு வாங்க. பார்த்தாச்சா? அவங்கதான் சொல்லிட்டன்களே, நீ என்னாத்த புதுசா சொல்ல போற-னு கேக்குறிங்களா? அவசரப்படாதிங்க சொல்லுறேன்.

   வின்மணி எழுதிய பதிவில் ஒரு தளம் விளம்பரங்களை தடுக்கிறது என்பதை பார்த்திருப்பீர்கள். நான் சொல்ல போவதில் ஒரு ப்ரோக்ராம் விளம்பரங்களை தடுப்பதை நாம் பார்க்கப்போகிறோம். புரியலையா? அவங்க சொன்னதுல ஒவ்வொரு தடவையும் அந்த தளத்துக்கு போய் நாம உலாவனும் (Browsing).  ஆனா இதுல ஒருதடவ இன்ஸ்டால் பண்ணிட்டாளே போதும். அப்புறம் நாம இத இன்ஸ்டால் பண்ணினதையே மறந்துடலாம்.  இது என்ன Horlicks, Complan விளம்பரம் மாதிரி இருக்குதுன்னு நினைகிறீங்களா??? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரியணும்-னு சொன்னேன்.

Picture 1
   அதெல்லாம் இருக்கட்டும், நீங்க கூகிள் Chrome இன்ஸ்டால் பண்ணி இருக்கிங்களா? நீங்க Chrome பயன்படுத்தினா இந்த பாராவ படிக்காம அடுத்த பாராவ படிங்க... அப்புடி இல்லையா? நான் தான் முன்னாடியே Chrome பத்தின அருமை பெரும எல்லாம் சொன்னேனே.... இன்னும் இன்ஸ்டால் பண்ணாம என்ன பண்ணுனீங்க?... சரி பொழச்சி போங்க. இங்க கிளிக் செஞ்சி இன்ஸ்டால் செய்த பின்ன இந்த பதிவ தொடர்ந்து படிங்க.

Picture 2
   Chrome ன் வலது மூலையில் உள்ள ஸ்பேனர் வடிவத்தில் உள்ள செட்டிங்க்சை கிளிக் செய்து (Picture 1) Extensions என்பதை கிளிக் செய்வதால் கிடைக்கும் பக்கத்தில் கீழுள்ள Get more extensions என்பதை கிளிக் செய்யவும். பிறகு வரும் வலை பக்கத்தில் Most popular என்பதை கிளிக் செய்த (Picture 2) பின் வரும் பட்டியலில் முதலில் உள்ள AdBlack என்பதை கிளிக் செய்து install என்ற Button னை  (Picture 3) அழுத்தவும். அப்பால வரும் dialog box லும் install என்ற Button னை (Picture 3) அழுத்திய பின் ஏதேனும் விளம்பரம் உள்ள பக்கத்தை திறந்து பாக்கவும். விளம்பரங்களை தடுப்பதால் அந்த பக்கம் முன்பைவிட வேகமாக திறப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

Picture 3
   ஒழுங்கா வேலை செய்தா? சரி விளம்பரத்த பர்க்குவர்க்காகவே ஒரு பக்கத்த திறந்து பாக்கணும். அப்ப என்ன செய்யலாம் னா.... போன பாரா ஆரம்பத்துல சொன்ன மாதிரி (Picture 1) Extensions என்பதை கிளிக் செய்வதால் கிடைக்கும் பக்கத்தில் AdBlack என்பதற்கு நேராக உள்ள Option (Picture 4) என்பதை கிளிக் செய்தால் மற்றொரு பக்கம் திறக்கும் அங்குள்ள tab ல் கடைசியாக உள்ள Exicuted Sites (Picture 5) என்பதில் கிளிக் செய்து காணப்படும் எழுத்துப் பெட்டியில் விளம்பரத்தினை தடுக்க தேவையில்லாத வலை பக்கத்தின் முகவரியை கொடுத்து Add (Picture 5) செய்ய வேண்டும். இதில் Domain Name மட்டும் கொடுக்கவும் " http://, / " போன்றவற்றை கொடுக்க வேண்டாம்.

Picutre 4
   அப்படி இல்லாமல் எல்லா பக்கத்தையுமே விளம்பரத்துடன் பார்க்க வேண்டும் என்றால் AdBlack அருகில் (Picture 4) உள்ள Disable என்பதை கிளிக் செய்வதன் மூலம் செயலிழக்க செய்ய முடியும். வேண்டும் என்றால் Enable செய்து கொள்ளலாம். இது மட்டுமல்ல இன்னும் பயனுள்ள Extensions பல இருக்கின்றது பிடித்திருந்தால் மற்றவற்றையும் பயன்படுத்தி பாருங்கள்.

Picutre 5
   இது தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாகவும், தெரிந்தவர்களுக்கு நியாபகமூட்ட கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை எழுதியுள்ளேன்.

   இருங்க, புரிஞ்சதா இல்லையா? செய்து பார்த்திங்களா, இல்லையா? ஏதும் டவுட் வந்துச்சா, இல்லையா? சொல்லிட்டு போகணும் ஆமா....
Powered by Blogger.