ஜிமெயிலில் - புதியவை

    கூகிள் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தன்னுடைய வாடிக்கையாளர்கள் எப்போதும் வேறு ஒருவரிடம் செல்ல விடக்கூடாது என்று எப்பொழுதோ முடிவுக்கு வந்து விட்டது.  தனது சேவைகளை நாளுக்கு நாள் மெருகேற்றிக்கொண்டே வருகிறது..... அதில் ஒரு படியாகத்தான் இன்று பல கணக்குகளை பயன்படுத்த வகை செய்துள்ளது.

    Google Chrome, நல்ல வேகமான, எளிமையான உலாவி என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே. நாம் Chrome ல் உலாவும் போது ஒன்றுக்கு மேற்பட்ட Gmail கணக்கு இருந்தால்,  அந்த இரண்டாவது கணக்கை திறக்க நாம் Internet Explorer அல்லது Mozilla fire fox திறந்து அதில் நமது இரண்டாவது கணக்கை திறப்போம்.  இப்போது அதையும் நீங்கள் Chrome ல் தான் திறக்க வேண்டும் என கூறி கூகிள் இப்போது தனது உலாவியின் சமீபத்திய பதிப்பில் உள்ள  incognito window மூலம் எத்தனை GMail கணக்கையும் திறக்க முடியும். இதை பெற Chrome உலாவியில் Ctrl + Shift + N போன்றவற்றை அழுத்துவதன் மூலம் பெறலாம். அல்லது வலது மூலையில் settings கிளிக் செய்து அதில் New incognito window என்பதை கிளிக் செய்வதன் மூலமும் பெற முடியும்.
    இதற்காக மற்றொரு வழியும் அறிமுகப்படுத்தி உள்ளது இதன் சிறப்பு... மற்ற உலாவிகளில் இனி நாம் ஜீமெயில் திறந்து வைத்துகொண்டு சிறிது நேரம் இடைவெளி விட்டு இன்னொரு ஜீமெயில் கணக்கை திறந்தால் நமக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீமெயில் கணக்கை பயன்படுத்தபோகிறீர்களா என்ற செய்தி வரும் இதில் நாம் வேண்டும் என்றால் ON என்பதையும் வேண்டாம் என்றால் OFF என்பதையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். வெகுவிரையில் இந்த சேவை விரிவாக நமக்கு கிடைக்கும் இதன் மூலம் ஒரே உலாவியில் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட ஜீமெயில் கணக்கை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தி பார்த்து கருத்துகளை கூறவும்......You may also like

4 comments:

 1. மிகவும் உபயோகமான தகவல்கள் தம்பி..

  ReplyDelete
 2. மிகவும் உபயோகமான தகவல் மட்டும் அல்ல தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் கூட...............

  ReplyDelete
 3. ஓட்டு அளித்தவர்களுக்கும், கருத்து இட்டவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்......

  ReplyDelete
 4. தமிழ் செய்திகள்,விளையாட்டு,சினிமா,பொழுதுபோக்கு.

  ur phone supported tamil font then
  join this channel u will get tamil SMS.

  ON ETAMILMINT to 09870807070

  (Indian Mobile user only)

  ReplyDelete

Powered by Blogger.