அழிந்ததாக கருதப்பட்ட ஒரு விலங்கினம் கண்டுபிடிக்கப்பட்டது.

   65 ஆண்டுகளாக அழிந்ததாக கருதப்பட்ட "தேவாங்கு" இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.  இப்போது தேவாங்கை தேடுவது போல் இன்னும் சில ஆண்டுகளுக்கு பின் வேறொரு இனத்தை அங்கு தேடவேண்டிய நிலை வந்தாலும் வரலாம் யார் கண்டது??? இதுக்கு மேல பேசுனா உள்ள தூக்கி போட்டாலும் போட்டுடுவாங்க. அதனால் நான் நேரா மேட்டருக்கு வரேன்.

   "தேவாங்கு" இதை பற்றி அதிகம் கேள்வி பட்டு இருக்க மாட்டோம். நமது நண்பர் ஒருவர் 'தேவாங்கு பக்கங்கள்' என அவரது பக்கத்துக்கு தலைப்பிட்டுள்ளார். பெரியவங்க "மூஞ்ச பாரு தேவாங்கு மாதிரி!" அப்புடின்னு திட்டுவதை பார்த்திருக்கேன்.(யாரை திட்டினாங்க-னு கேக்காதிங்க என்னோட சீக்ரெட் எல்லாம் நான் வெளியில சொல்லுறது இல்ல).  இது மரங்களுக்கு இடையே வாழும் 350 கிராம் வரை எடையுள்ள ஒரு சிறு பாலூட்டி விலங்கு. முட்டை, பூச்சி, பல்லி போன்றவற்றை உண்ணும். இது இரவில் தான் இறை தேடும். இரவில் இதன் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.

   உலகில் மனிதன் காடுகளை மட்டும் அல்ல அதில் உள்ள பல உயிரினங்களை அழித்துக்கொண்டு இருக்கிறான். இந்த தேவாங்கு இலங்கையில் 1939 ஆம் ஆண்டு கடைசியாக காணப்பட்டது. மனிதனின் சுயநலம் காரணமாக இலங்கையில் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதால் இவை அழியும் நிலைக்கு காரணமானது. இலங்கையின் ஓடன் சமவெளிப் பகுதியில் 120 இடங்களில் நடத்தப்பட்ட சுமார் 3 ஆண்டிற்கும் மேற்பட்ட ஆய்வில் இவ்விலங்கு இருப்பதை ஆய்வியலாளர்கள் புகைப்படத்துடன் உறுதிசெய்துள்ளனர். அங்கு இதன் எண்ணிக்கை 100 க்கும் குறைவாகத்தான் இருக்கும் என கூறியுள்ளனர். 

   தமிழகத்தில் நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பொய்கைமலை வனப்பகுதிகளில் தேவாங்குகள் வசித்து வருவதாக கருதப்படுகிறது.  இங்கும் இவை நிம்மதியாக இல்லை. குறவர் போன்றவர்களால் அதிகமாக வேட்டையாடப்படுகிறது. ஆஸ்துமா நோயை குணமாக்கும் என்ற தவறான எண்ணத்திலும் இவை வேட்டையாடப்படுகிறது. எனவே தேவாங்கை காக்க மணப்பாறை பொய்கைமலையில் சரணாலயம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

   எது எப்படி இருப்பினும் விலங்குகள் மட்டும் அல்ல மனிதனும் தன் அழிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறான் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.


You may also like

3 comments:

  1. எதாவது சொல்லிட்டு போங்க....

    ReplyDelete
  2. மிக்க நன்றி... என்னுடைய மாணவர்களுக்கு உங்கள் படம் உதவியது.. நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் ரஞ்சித் நானும் தஞ்சாவூர் தான். சிங்கப்பூரி தமிழாசிரியர். தேவாங்கை இணையத்தில் தேடியபோது பாடத்திற்காக... உங்கள் வலைப்பூ கிடைத்தது.. சந்தித்ததில் மகிழ்ச்சி... ssdavid63@yahoo.com நேரம் கிடைக்கும்போது தொடர்பு கொள்ளலாம்.. நன்றி

    ReplyDelete

Powered by Blogger.