விளம்பரம் இல்லாமல் வலை பக்கங்களை காண

   நம்ம Computer ல நாம பாட்டுக்கு வேலை செய்துகிட்டு இருப்போம். திடீரென எதோ ஒரு காரணத்துக்காக ரொம்ப அவசரமா ஒரு வலை பக்கத்த திறப்போம். அந்து Load ஆகும் போது ஒரு நீளமான கோடு வரும் அப்புறம் அந்த கோடு Screen முழுக்க விரியும். என்னன்னு பாத்தா எதாவது ஒரு விளம்பரம் வந்து நிக்கும். அப்படியே நம்ம Monitor அ தூக்கி போட்டு ஒடச்சி போட்டுலாம் போல தோணும். ஆனா அதெல்லாம் செய்யாம Close Button எங்க இருக்கன்னு தேடி, அத அழுத்திட்டு வேலைய பாப்போம்.

   இதை தடுப்பதை பற்றி ஏற்கனவே வின்மணி எழுதிய பதிவில் நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி இல்லை எனில் இங்கு கிளிக் செய்து பார்த்துவிட்டு வாங்க. பார்த்தாச்சா? அவங்கதான் சொல்லிட்டன்களே, நீ என்னாத்த புதுசா சொல்ல போற-னு கேக்குறிங்களா? அவசரப்படாதிங்க சொல்லுறேன்.

   வின்மணி எழுதிய பதிவில் ஒரு தளம் விளம்பரங்களை தடுக்கிறது என்பதை பார்த்திருப்பீர்கள். நான் சொல்ல போவதில் ஒரு ப்ரோக்ராம் விளம்பரங்களை தடுப்பதை நாம் பார்க்கப்போகிறோம். புரியலையா? அவங்க சொன்னதுல ஒவ்வொரு தடவையும் அந்த தளத்துக்கு போய் நாம உலாவனும் (Browsing).  ஆனா இதுல ஒருதடவ இன்ஸ்டால் பண்ணிட்டாளே போதும். அப்புறம் நாம இத இன்ஸ்டால் பண்ணினதையே மறந்துடலாம்.  இது என்ன Horlicks, Complan விளம்பரம் மாதிரி இருக்குதுன்னு நினைகிறீங்களா??? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் புரியணும்-னு சொன்னேன்.

Picture 1
   அதெல்லாம் இருக்கட்டும், நீங்க கூகிள் Chrome இன்ஸ்டால் பண்ணி இருக்கிங்களா? நீங்க Chrome பயன்படுத்தினா இந்த பாராவ படிக்காம அடுத்த பாராவ படிங்க... அப்புடி இல்லையா? நான் தான் முன்னாடியே Chrome பத்தின அருமை பெரும எல்லாம் சொன்னேனே.... இன்னும் இன்ஸ்டால் பண்ணாம என்ன பண்ணுனீங்க?... சரி பொழச்சி போங்க. இங்க கிளிக் செஞ்சி இன்ஸ்டால் செய்த பின்ன இந்த பதிவ தொடர்ந்து படிங்க.

Picture 2
   Chrome ன் வலது மூலையில் உள்ள ஸ்பேனர் வடிவத்தில் உள்ள செட்டிங்க்சை கிளிக் செய்து (Picture 1) Extensions என்பதை கிளிக் செய்வதால் கிடைக்கும் பக்கத்தில் கீழுள்ள Get more extensions என்பதை கிளிக் செய்யவும். பிறகு வரும் வலை பக்கத்தில் Most popular என்பதை கிளிக் செய்த (Picture 2) பின் வரும் பட்டியலில் முதலில் உள்ள AdBlack என்பதை கிளிக் செய்து install என்ற Button னை  (Picture 3) அழுத்தவும். அப்பால வரும் dialog box லும் install என்ற Button னை (Picture 3) அழுத்திய பின் ஏதேனும் விளம்பரம் உள்ள பக்கத்தை திறந்து பாக்கவும். விளம்பரங்களை தடுப்பதால் அந்த பக்கம் முன்பைவிட வேகமாக திறப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

Picture 3
   ஒழுங்கா வேலை செய்தா? சரி விளம்பரத்த பர்க்குவர்க்காகவே ஒரு பக்கத்த திறந்து பாக்கணும். அப்ப என்ன செய்யலாம் னா.... போன பாரா ஆரம்பத்துல சொன்ன மாதிரி (Picture 1) Extensions என்பதை கிளிக் செய்வதால் கிடைக்கும் பக்கத்தில் AdBlack என்பதற்கு நேராக உள்ள Option (Picture 4) என்பதை கிளிக் செய்தால் மற்றொரு பக்கம் திறக்கும் அங்குள்ள tab ல் கடைசியாக உள்ள Exicuted Sites (Picture 5) என்பதில் கிளிக் செய்து காணப்படும் எழுத்துப் பெட்டியில் விளம்பரத்தினை தடுக்க தேவையில்லாத வலை பக்கத்தின் முகவரியை கொடுத்து Add (Picture 5) செய்ய வேண்டும். இதில் Domain Name மட்டும் கொடுக்கவும் " http://, / " போன்றவற்றை கொடுக்க வேண்டாம்.

Picutre 4
   அப்படி இல்லாமல் எல்லா பக்கத்தையுமே விளம்பரத்துடன் பார்க்க வேண்டும் என்றால் AdBlack அருகில் (Picture 4) உள்ள Disable என்பதை கிளிக் செய்வதன் மூலம் செயலிழக்க செய்ய முடியும். வேண்டும் என்றால் Enable செய்து கொள்ளலாம். இது மட்டுமல்ல இன்னும் பயனுள்ள Extensions பல இருக்கின்றது பிடித்திருந்தால் மற்றவற்றையும் பயன்படுத்தி பாருங்கள்.

Picutre 5
   இது தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாகவும், தெரிந்தவர்களுக்கு நியாபகமூட்ட கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை எழுதியுள்ளேன்.

   இருங்க, புரிஞ்சதா இல்லையா? செய்து பார்த்திங்களா, இல்லையா? ஏதும் டவுட் வந்துச்சா, இல்லையா? சொல்லிட்டு போகணும் ஆமா....


You may also like

4 comments:

 1. நன்றி நல்ல பதிவு உபயோகமா இருந்தது , அப்படியே கொஞ்சம் வலைப்பக்கங்கள் படிக்கும் போது பாட்டு கேக்காமல் படிப்பது எப்படி என்று சொல்லுங்களேன், உதரணத்துக்கு உங்க வலையில் கூட பட்டு கேக்குது, "இடையூறாக இருக்குது"

  ReplyDelete
 2. side bar ல் உள்ள radio getgate ல் stop அழுத்தினால் பாட்டு கேட்காது...

  ReplyDelete
 3. google adds சையும் தடை செய்யுமா ???? ;-)

  ReplyDelete
 4. முடியும். இதன் option ல் ஜெனரல் டப் ல் உள்ள "I like the text ads on Google search results; show me those." என்ற option ஐ தேர்ந்தெடுத்தல் google ads தெரியும். இல்லையேல் அதுவும் தடை செய்யப்படும்.

  ReplyDelete

Powered by Blogger.