இயற்கையின் அதிசய புகைப்படங்கள்

   மனிதனால் நம்பமுடியாத அளவிற்கு பல செயல்கள் இயற்கையாக நிகழ்கின்றன. அவைகள் பார்ப்பதற்கு அழகாகவும், மெய்சிளிர்க்கக்கூடிய அளவிலும் காணப்படுகின்றன. அவற்றை காணும் போது இது போன்றும் நடக்குமா? என்று வியக்கக்கூடிய அளவிலான புகைப்படங்களை இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.

நகரும் கற்கள்

   ஒரு குண்டுக்கல் தானாக நகர்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வறண்ட ஏரி. வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மலைப்பிரதேசங்களில் இவை காணப்படுகின்றன.
   பனிக்கட்டி உருகும் நிலையில் அதனால் எளிதாக நகர முடியும். இதே போன்று தான் இந்த கற்களும் நகருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மழைநீர் கற்களுக்கு அடியில் உறைந்து இருக்கும் போது பலத்த காற்று அடித்தல் நீர் உருகி கற்கள் நகரும் என்பது அவர்களது விளக்கம். இவை எப்போது எந்த திசையில் நகரும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்று.

குழம்புப்பாறைத்தம்பம்


   இவை ஆப்ரிக்கா, ஆசியா, ஈரோப், வடக்கு அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. மனிதன் உருவாக்கியது போல மிக அழகாக அமைந்துள்ளது. 
மேலும் குறிப்புக்கு http://www.luzicke-hory.cz/mista/index.php?pg=zmpansc

  நீல துளைகள்

     இந்த துளைகள் நீருக்கடியில் வட்டமாக 8000 மீட்டர் ஆழம் கூட இருக்கக்கூடும் எனவும், இதன் அகலம்(விட்டம்) இரண்டிலிருந்து இருநூறு மீட்டர் வரை காணப்படும்.  இதன் அகலமானது 250 வருடத்திற்கு ஒரு சென்டி மீட்டர் வளரும் என கணித்திருக்கிறார்கள். ஐஸ்லாந்தில் இவை காணப்படுகின்றன.

  சிவப்பு அலைகள்

     அமில மழை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? பள்ளி வகுப்புகளில் படித்திருப்போம்.  கடலுக்கு அருகில் செல்லும் மேகங்கள் சில நேரங்களில் அமிலங்களை கொட்டிவிட்டு போகும். இந்த அமிலங்கள் கடல் நீரோடு வினைபுரிந்து இந்த சிவப்பு அலைகளை உருவாக்கும்.  இந்த அலைகள் கடல் உயிரினங்களுக்கு தீங்கினை விளைவிக்கக்கூடும்.

  பனி வட்டங்கள்

     இது பனிக்கட்டி தவிர வேறு ஏதும் காணப்படாத நீர்நிலைகளில் காணப்படும். கரைபகுதியில் அல்லாமல் நடுபகுதியில் பனிக்கட்டி தோண்டுவதால் ஏற்படுகிறது. இது அதிகபட்சமாக 500 அடி விட்டம் வரை காணப்படலாம்.

  விழிவில்லை மேகங்கள்

     ஓரிடத்தை மையமாகக்கொண்டு காற்று நீண்ட நேரம் சுழலும் போது அதை சூழ்ந்துள்ள மேகங்கள் இது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. இவை சில நேரங்களில் மேலும் கீழும் வேறு வேறு வடிவங்களாக நமது கண்களுக்கு விருந்தளிக்கும்.

  ஒளி தூண்கள்

     பக்கவாட்டு மேகங்களின் வழியே சூரிய ஒளி ஊடுரும் போது இது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

  ஒளி வட்டம்

     இதுவும் மேலே பார்த்த ஒளி தூண்கள் போல மேகம் படிக உருவில் இருக்கும் போது அதன் வழியே ஊடுருவும் சூரிய ஒளி இவ்வாறு தோன்றும்.

  நெருப்புச் சுழல்

     காட்டில் நெருப்பு பற்றி எரியும் போது காற்று சுழல் ஏற்பட்டால் காற்றுடன் சேர்த்து நெருப்பும் சுழல்வதால் இந்த நம்பமுடியாத சுழல் நமது கண்களை மிரட்டும்.  இது நகர்தபடியே 10 அடி அகலத்தில் 30 முதல் 200 அடி வரை எழும்பும்.


     இருங்க இருங்க.... எதாவது கருத்து சொல்லிட்டு, ஒட்டு போட்டுட்டு போங்க....


  You may also like

  5 comments:

  1. மிக்க நன்று!

   நகரும் கற்களைப்பற்றிய எனது விரிவான பதிவுக்கு இங்கே செல்லவும்:
   http://kaaranam1000.blogspot.com/2010/02/1.html

   நன்றி!

   அன்புடன்
   கார்த்திகேயன்
   காரணம் ஆயிரம்
   http://kaaranam1000.blogspot.com

   ReplyDelete

  Powered by Blogger.