ரக்ஷா பந்தன்

0 Comments
   விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம்? இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா? அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும்.  என்னை பொறுத்தவரை நண்பர்கள், உறவினர்கள், அருகில் உள்ளவர்களிடையே அன்பை பரிமாறுவதே விழாக்களில் உள்ள நன்மை என கூறுவேன்.
   ரக்க்ஷா பந்தன், இது இந்து மத லூனார் நாள்காட்டியின் 'ஸ்ராவன்' மாதத்தில் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழை பொறுத்தவரை பெரும்பாலும் ஆவணி மாதத்தில் முதல் பௌர்ணமி நாளில் வரும். அதன் படி இந்த வருடம் ஆங்கில நாளில் இன்று (ஆகஸ்ட் 24 ஆம் தேதி) ஆகும். இந்துக்கள் பண்டிகைகளிலேயே இது தான் மிகவும் நல்ல பண்டிகை என்று சொன்னால் அது மிகையாகாது.

பொருள்
   இந்தியில் ரக்க்ஷா என்றால் பாதுகாப்பு (Production) என்று பொருள். இது Sanskrit மொழியில் இருந்து பிறந்த வார்த்தை என கருதப்படுகிறது. பந்தன் என்பது கட்டுவதை குறிக்கும்.

   பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் கையில் மஞ்சள் நூல் கட்டி இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதனை ஒரு ஆண் ஏற்றுக்கொள்வதால், அந்தச் சகோதரியின் "பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் துணையாக இருப்பேன்" என உறுதி அளிக்கிறான். ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். இந்த பண்டிகையை ஒரு மதப் பண்டிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என கூறலாம். வட இந்தியாவில் பிரபலமாக கொண்டாடப்படும் இந்த விழா, தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருவது மகிழ்ச்சி தரக்கூடியதே. வண்ணமயமான ராக்கிகள், தென்னிந்தியாவில் சின்னச் சின்ன கடைகளில் கூட தொங்குவதைக் காண முடிகிறது.

புராணக் கதை
   பலி என்ற மன்னன் விஷ்ணுவின் தீவிர பக்தன். பலியின் ராஜ்ஜியத்தைக் காக்க சத்தியம் கொடுத்ததால் வைகுண்டத்தை விட்டு வந்தார் லட்சுமி தேவி விஷ்ணுவிடம் இருக்கப் பிரியப்பட்டு ஒரு பெண் வேஷம் இட்டுக்கொண்டு பலியிடம் அடைக்கலம் புகுந்தாள் அப்போது பூர்ணிமா தினம் அன்று, அவனை சகோதரனாக பாவித்து ராக்கி கட்டி விட்டாள். இது வடக்கில் நம்பும் புராணக் கதை.

   புராணங்களை நான் நம்புவதில்லை. எது எப்படி இருந்தாலும் எல்லோரையும் சகோதர சகோதரியாக்ப் பார்க்கும் நல்லெண்ணம் ஆரோக்கியமான விஷயம் தானே....

வரலாறு
   பெண்கள் தங்கள் சகோதர அன்பை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக இது பழங்காலந்தொட்டு கொ‌ண்டாட‌ப்ப‌ட்டு வருகிறது.

   மாமன்னர் அலெக்சாண்டருக்கும், போரஸிசிர்க்கும் இடையே கடுமையான போர் நடந்து கொண்டு இருந்தது. அப்போது அலெக்சாண்டரின் மனைவி போரஸின் கூடாரத்திற்கு சென்று போரஸின் கையில் ஒரு ராக்கியை கட்டிவிட்டு வந்தவழியே திரும்பிவிட்டாள்.

   மறுநாள் போரில் அலெக்சாண்டரை கீழே தள்ளி ஈட்டியை பாய்ச்ச எண்ணிய போரஸ் தன் கையில் இருந்த ராக்கியை பார்த்து விட்டு, "உனது மனைவி என்னது சகோதரி. என் சகோதரி விதவையாக கூடாது" என்று கூறி திரும்பி சென்றதாக வரலாறு.

 கி.பி. 1303ம் ஆண்டு சித்தூர்கரை (ராஜஸ்தான்) டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி படைகளுட‌ன் தாக்க வரும் போது, ‌சி‌த்தூ‌ர்க‌ர் ராணி பத்மினி அண்டை நாட்டு மன்னர்களுக்கு ராக்கி அனுப்பியதாக சரித்திரக் குறிப்புகள் உள்ளன. ரா‌ணி ப‌த்‌மி‌னி ரா‌க்‌கி அனு‌ப்‌பியத‌ன் மூல‌ம் அ‌ண்டை நா‌ட்டு ம‌‌ன்ன‌‌ர்க‌ள், தன் சகோதரியையு‌ம், அவ‌ர்களது ஆ‌ட்‌சி‌ப் பகு‌தியையு‌ம் காக்க வே‌ண்டிய கடைமை ஏ‌ற்ப‌ட்டது. அதனா‌ல் அந்த மன்னர்கள் தங்கள் படைகளை அனுப்‌‌பி சு‌ல்தா‌ன் அலாவு‌தீனுட‌ன் போ‌ர் பு‌ரிய ஏ‌ற்பாடு செ‌ய்தது‌ம் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இந்த நாளின் மற்ற சிறப்பு
   இந்து சமுதாயத்தில் இந்த நாளில் பல பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.  ஸ்ராவன் பூர்ணிமா என்ற விழா பொதுவாக பல வட இந்தியர்களால் கொண்டாடப்படுகிறது. இதே விழா நரலி பூர்ணிமா என்ற பெயரில் மகாராஷ்டிராவிலும், அக்ஷர் பூர்ணிமா என்ற பெயரில் குஜராத்திலும் கொண்டாடுகின்றனர். இதே நாளில் இந்த வருடம் ஆவணி அவிட்டம் என்ற ஒரு விழாவினை தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர்.

   நல்லது அதிகமா இருந்தா கொண்டாடலாமே.... நல்லா இருந்தா ஓட்டு போடலாமே....


You may also like

No comments:

Powered by Blogger.