உலக சுற்றுச்சூழல் நாள் (ஜூன் 5)

6 Comments

       உலக சுற்றுச்சூழல் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு ஆகும். இது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1972 ஆன் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சபையின் சார்பில் இத் தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஒரு இடம் தெரிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது.




     சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்ற ஒன்றாக இருந்து வருகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும், அதனால் ஏற்படுகின்ற பாதகமான விளைவுகளும், இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளன. உலக சூழல் தின நிகழ்வுகளின் முக்கியமான நோக்கம், உலகம் தழுவிய அளவில் சூழலின் முக்கியத்துவம் பற்றிய உணர்வை ஏற்படுத்துவதும், அரசியல் மட்டத்தில் கவனத்தை ஈர்த்து, உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுவதுமாகும்.





     நீதியான, தாங்குநிலை சார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் மக்கள் தங்கள் நேரடியான பங்களிப்பைச் செலுத்துவதற்கு அவர்களை ஊக்குவித்தல், சூழல் தொடர்பான விடயங்களில், மக்களுடைய மனப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு சமுதாயங்களுக்கு உண்டு என்ற புரிந்துணர்வை உருவாக்குதல், பாதுகாப்பானதும், வளமுள்ளதுமான எதிர்காலத்தை பல்வேறு நாடுகளிலும் வாழுகின்ற மக்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதற்காகக் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளை இந்த நிகழ்வுகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன.


     நம்மில் எத்துனை பேர் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருக்கிறோம் ?  கொஞ்சம் யோசனை பண்ணி பாருங்க?.   காய்கறி market க்கு போனா,  கடைக்கு போனா care-e bag ல வாங்கிக்கலாம் னு எதையுமே எடுத்துகிட்டு போறது இல்ல.  இதுல இன்னும் கொடும என்னன்னா டீ வாங்க போனா கூட இந்த care-e bag தான் பயன் படுத்துறங்க.  ஜப்பான் ல பிளாஸ்டிக் பொருள பயன் படுத்த கூடாதுன்னு சட்டமே போட்டு இருக்காங்க.

     "சரி, அதுக்கு நான் என்ன செய்றது?" னு நீங்க நினைக்கிறது என் காதில் விழுது.  பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் - என்று நான் சொல்லல.  அதை குறைசிக்கலாமே னு தான் சொல்லுறேன்.  இந்த சுற்றுப்புற சூழல் தினத்துல இந்த ஒன்றையாவது நம் பங்கிற்கு செய்வோம்.

"சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்;
சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான்."

                 ஜெய் ஹிந்த்!!!


You may also like

6 comments:

  1. பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறன்.

    ReplyDelete
  2. அன்பின் ரஞ்சித். புதிய பதிவரான உங்களை பதிவுலகிற்கு வருக வருக என முதலில் வரவேற்கிறேன். இதுவே உங்கள் தளத்திற்கு முதல் வருகை. அருமையான கருத்துகள். தொடருங்கள். வாழ்த்துகள்.

    இந்த பதிவை முகப்புத்தகத்தில் உங்கள் பெயரிட்டு பதியலாமா.? அனுமதி தேவை.

    நன்றி தம்பி.

    ReplyDelete
  3. தாராளமாக பதிந்து கொள்ளுங்கள் தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி....

    ReplyDelete
  4. அக்கறையான இடுகையை வரவேற்கிறேன் நண்பரே

    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. mail enable pannuga

    kindly remove word verification in comment settins

    thankingyou

    ReplyDelete
  6. நிகழ்காலத்தில்...

    //அக்கறையான இடுகையை வரவேற்கிறேன் நண்பரே
    வாழ்த்துகள்//

    நன்றி நண்பரே.....

    ReplyDelete

Powered by Blogger.