குழந்தைகளுக்கு புற்றுநோய் சிகிச்சை டெண்டுல்கர் பிரசாரத்தில் ரூ.1.30 கோடி குவிந்தது

0 Comments

புற்றுநோய் தாக்கிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஒரே மாதத்தில் சச்சின் டெண்டுல்கர் ரூ.1.30 கோடி திரட்டி உள்ளார்.

மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவராக இருக்கும் டாக்டர் பி. ஜெகன்னாத், ‘க்ருசேட் அகைன்ஸ்ட் கேன்சர் பவுண்டேசன்’ என்ற அமைப்பை தொடங்கி உள்ளார். இந்த அமைப்பு இந்தியா முழுவதும் ஏழை குடும்பங்களை சேர்ந்த புற்றுநோய் தாக்கிய குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கிறது.
இந்த அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக, ‘குழந்தைகள் புற்றுநோய்க்கு எதிராக போர்’ என்ற பிரசாரத்தை தனது டிவீட்டரில் சச்சின் செய்தார். இதை பார்த்தவர்கள், ஒரே மாதத்தில் ரூ.1.30 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.


You may also like

No comments:

Powered by Blogger.