கருப்பு பெட்டி என்றல் என்ன?

0 Comments






விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது விமானிக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெறும். அதேபோல், விமானத்துக்குள் விமானியும், துணை விமானியும் விமானத்தை இயக்குவது தொடர்பாக பேசிக் கொள்வார்கள். இவை அனைத்தும், ‘காக்பிட்’ எனப்படும் விமானி அறைக்குள் வைக்கப்பட்டுள்ள ‘கருப்பு பெட்டி’யில் பதிவாகும்.
பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்து சுக்குநூறாக நொறுங்கினாலும், தீப்பிடித்து முழுவதும் கருகினாலும் அல்லது கடலில் பல மைல் ஆழத்தில் மூழ்கினாலும் கூட இந்த கருப்பு பெட்டி மட்டும் பெரும்பாலும் சேதம் அடையாது. அவ்வளவு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது.
விபத்து எப்படி நடந்தது? என்பதை அறிய, இந்த கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்தான் உதவியாக இருக்கும்.
மங்களூரில் ஏர்&இந்தியா விமானம் உடைந்து, எரிந்து கருகிய இடத்தில் இந்த பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. விமான போக்குவரத்து இயக்குனரகம், விமான பாதுகாப்பு பிரிவு, தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்டோர் இந்த தேடுதலில் ஈடுபட்டு, அந்த பெட்டியை கண்டுபிடித்தனர்.
அது நல்லமுறையில் இருக்கிறது. அதனால், அதில் பதிவாகி இருக்கும் தகவல்கள் சேதம் அடைந்திருக்க வாய்ப்பு இல்லை. டெல்லியில் உள்ள விமானப் போக்குவரத்து இயக்குனரக தலைமை அலுவலகத்தில் கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ள உரையாடல் ஆராயப்பட உள்ளது.




  • ‘கருப்பு பெட்டி’ கருப்பு நிறமாக இருக்காது. எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் ஆரஞ்சு நிறத்தில்இருக்கும்.
  • ஒரு விமானத்தில் சிறியது, பெரியது என 2 கருப்பு பெட்டிகள் இருக்கும்.
  • பெரிய கருப்பு பெட்டிக்கு ‘பிளைட் டேட்டா ரிக்கார்டர்’ என்று பெயர். விமானம் பறக்கும் உயரம், வேகம், நேரம் போன்ற விவரங்களை இது பதிவு செய்யும்.
  • சிறிய கருப்பு பெட்டிக்கு ‘வாய்ஸ் ரிக்கார்டர்’ என்று பெயர். விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்கள் மற்றும் அங்கு ஏற்படும் மற்ற சத்தங்கள் இதில் பதிவாகும்.
  • விபத்து நேர்ந்தால் அதிகம் பாதிக்காத வகையில், 2 பெட்டிகளும் வால் பகுதியில்தான் வைக்கப்பட்டு இருக்கும்.
  • இரண்டு கருப்பு பெட்டிகளும் 25 மணி நேரம் நடைபெறும் சம்பவங்கள், உரையாடலை பதிவு செய்யும்.
  • 2012 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும்.
  • 1000 டன் இரும்பு பாளத்தை போட்டாலும் நசுங்காது.
  • கடலில் பல மைல் ஆழத்தில் விழுந்தாலும் பாதிக்காது.
  • இதன் பேட்டரிகள் 6 ஆண்டுகள் செயல்படும்.
  • பெட்டியில் இருந்து தொடர்ந்து ‘பீப்’ ஒலி வந்து கொண்டே இருக்கும். விபத்து நடந்த இடத்தில் இருந்து பெட்டியை எளிதாக கண்டுபிடிக்க இது உதவுகிறது.
  • 1953ல் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள டேவிட் வாரன் விமான ஆய்வு மையத்தில் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.


You may also like

No comments:

Powered by Blogger.