மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்

     ஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பயணித்துக்கொண்டிருந்தார். வழியில் ஒரு ஆற்றைக்கடக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. நீண்ட தூரம் நடந்து களைத்துப் போயிருந்த புத்தரும் சீடர்களும் ஆற்றங்கரையில் அமர்ந்தனர். புத்தர் தனக்கு தாகமாக இருப்பதாகவும் ஆற்றில் தண்ணீர் எடுத்துவரும்படியும் ஒரு சீடரைப்பணித்தார்.     உடனே ஆற்றைநோக்கிவிரைந்த சீடர் தண்ணீர் எடுக்க முயற்சித்த தருணத்தில்தான் கவனித்தார், ஒரு எருமை மாட்டு வண்டி ஆற்றைக்கடந்துகொண்டிருந்தது. அதன் விளைவாக ஆற்று நீர் கலங்கி அழுக்காகிப்போயிருந்தது. அந்த அழுக்கு நீரை எப்படி குருவுக்கு எடுத்துச்செல்வது என்று யோசித்த சீடர் மீண்டும் புத்தரிடம் வந்து அந்த நீர் குடிப்பதற்கு உகந்தல்ல அழுக்காக இருக்கிறது என்றார்.


     மீண்டும் அரைமணிநேரத்தில் அதே சீடரை தண்ணீர் எடுத்துவரும்படி பணித்தார் புத்தர். மீண்டும் ஆற்றைநோக்கி விரைந்தார் சீடர் ஆனால் ஆறு அப்போதும் அழுக்காகத்தான் இருந்தது. மீண்டும் புத்தரிடம் திரும்பிவந்த சீடர் ஆறு இன்னும் கலங்கலாகத்தான் இருக்கிறது என்றார்.


     இன்னும் அரை மணிநேரம் கழித்துச் மீண்டும் அதே சீடனை அனுப்பினார் புத்தர். இந்தத்தடவை தண்ணீர் தெளிவாக இருந்தது. சீடன் தண்ணீரை எடுத்துக்கொண்டு புத்தரிடம் திரும்பினார்.


     புத்தர் சொன்னார் இது போலதான் உங்கள் மனமும். உங்கள் மனமானது குழப்பத்திலிருக்கும் போது அதை அதன் போக்கிலேயே விடுங்கள், சிறிது நேரம் பொறுமையாக இருங்கள், மனதை அமைதிப்படுத்த எந்த ஒன்றையும் கஷ்டப்பட்டு செய்ய வேண்டியதில்லை. அதுதானாக அமைதியடையும்.


You may also like

No comments:

Powered by Blogger.