இலட்சினை உருவான கதை

2 Comments
  செம்மொழி மாநாடு முடிஞ்சாச்சு. அதுக்காக தமிழ மறந்துட முடியுமா? இம்மாநாடு பற்றிய சில முக்கியமான தகவல்கள் நாம் தெரிந்துகொள்ளக்கூடியவை.  கம்பீரமான திருவள்ளுவரின் உருவசிலை, அதன் பின்னணியில் சுனாமி அலை. "பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்" என்ற அவரது வரிகள், நன்றாகத்தான் வடிவமைத்திருக்கிறார் ஓவியர் சந்ரு.

   ஆம் நண்பர்களே இந்த இலச்சினை உருவாக்கியது எழும்பூர் கலைக்கல்லூரியின் முதல்வர் திரு. சந்ரு.  இதை உருவாக்க அவரது தலைமையில் ஒருமாதம் முயற்சித்து உருவாக்கப்பட்டது. உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான அறிவிப்பு வந்தவுடன் தஞ்சை தமிழ் பல்கலைகழக துணை வேந்தர் ம. ராஜேந்திரன் அவரை தொடர்பு கொண்டு வடிவமைக்க கூறியுள்ளார்.  அதில் திருவள்ளுவர் சிலை இருக்க வேண்டும் எனவும், பெருமை, பண்பாடு, கலாச்சாரம், அனைத்தையும் வெளிப்படுத்துவதாக அது இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

   15 நாட்களில் 25 க்கும் மேற்பட்ட இலச்சினைகளை திரு ராஜேந்திரனிடம் காண்பித்து இருக்கிறார் அவர் மேலும் எதிபார்ப்பதாக கூறி, தமிழின் பெருமைகளை தவிர மேலும் அதன் அழிய நிலை தன்மையையும் அது வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

   சமீபத்திய அழிவு சுனாமிதான் அதை பின்னனியி வைக்கலாமா என இலச்சினையில் அழிவை காட்டுவதால் பிறர் விமர்சிக்கக்கூடும் என்ற ஒரு சிறிய பயத்துடன் கேட்டார்.  'தமிழும் வள்ளுவமும் எந்த எதிர்ப்பு பேரலையையும் தாண்டி உலகுள்ளவரை வாழும்' என்பதற்கு அடையாளமாக சுனாமியை வைத்தால் பொருத்தமாகத்தான் இருக்கும் என அவர் கூறியதால், இவ்வாறு வடிவமைக்கப்பட்டது.

   வடிவமைத்த பிறகு தலைப்பு என்ன வைக்கலாம் என திரு ராஜேந்திரனிடம் கேட்டபோது அவர் முதல்வரிடம் கேட்டு சொல்கிறேன். என கூறி முதல்வரிடம் கேட்டுள்ளார்.  முதல்வர் எழுதி கொடுத்த தலைப்பு "பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்". அது திரு சந்ருவிடம் அனுப்பப்பட்டது. அவரது கையெழுத்திலேயே வைத்து விடலாம் என இலச்சினையில் அதை பொருத்திவிட்டார்.

   பின்பு முதல்வரிடம் இலச்சினை அனுப்பப்பட்டது. முதல்வருக்கு மிகவும் பிடித்திருந்தது. இருப்பினும் தொல்லியல் தரவுகள் சரிதானா என்று திரு ஐயவதாரம் மகாதேவனிடம் உறுதி படுத்திய பின்னர், தலைமைச் செயலகத்தில் ஐயவதாரம் அவர்களால் வெளியிடப்பட்டது.

   இலச்சினையில் உள்ள தரவுகள் மொத்தம் ஏழு இதில் முதல் தரவு - இறைவனை குறிப்பதாகவும், இரண்டாவது தரவு - உலக அளவில் அசையும் உருவத்தை முதலில் பதிவுசெய்த சிற்பம். மூன்றாவது தரவு - காளை (விவசாய அடிப்படை சிறப்பை குறிப்பதற்காக). நான்காவது தரவு - கப்பல் (நமது வணிக சிறப்பை உணர்த்துகிறது). ஐந்தாவது தரவு - கலைமான் (நமது கலைச் சிறப்பை உணர்த்துகிறது). ஆறாவது தரவு - சங்க இலக்கியத்தில் புறத்திணையில் வரும் வேலன் வேட்டயடுதலை குறிக்கிறது. எழாவது தரவு - நீரருந்தும் காளை.

   இவை அனைத்தும் தமிழரது கலாச்சார பெருமையை எடுத்துக்கூறும் என்ற நோக்கத்துடன் வடிவமைத்து இருக்கிறார்கள்.



You may also like

2 comments:

  1. Mr. mu.ka is misusing the love people have for Tamil language. they were more interested in promoting the family members in public minds. most of the paper presentations as cited by the press were below standards.

    paper presentation on kanimozhi's contribution to Tamil literature(?) was comedy no-1.approval was not obtained from the original governing body so this is only a duplicate Tamil conference. by introducing a parallel sangam politics has entered into tamil conferences also. from now onwards tamil conferences will become jalra conference. the first one just got over

    ReplyDelete

Powered by Blogger.